புதினங்களின் சங்கமம்

யாழில் பவுண் களவு இனி இல்லை பாண் களவுதான் நடைபெறும்!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாணை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் சந்திக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து 2 றாத்தல் பாண் வாக்கிகொண்டு வீடு நோக்கிப் பயணித்த முதியவரிடம் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பாணை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர் என தெரியவருகின்றது.