புலம்பெயர் தமிழர்

நோர்வேயில் மனைவியின் மார்பைக் கடித்துக் குதறிய யாழ்ப்பாணக் குடும்பஸ்தன்!!

நோர்வேயில் கடும் மது போதையில் மனைவியின் மார்பைக் கடித்து கடும் காயங்களுக்குள்ளாக்கிய கணவனை நோர்வேப் பொலிசார் கைது செய்துள்ளனர். 46 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டு நள்ளிரவு வேளை வீட்டின் உள்ளே வந்து படுத்திருந்த 42 வயதான மனைவியை கடித்துக் குதறியதாகத் தெரியவருகின்றது. மனைவியின் கதறல் சந்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்து தந்தையை தள்ளி விழ்த்தியதுடன் பொலிசாருக்கு தொலைபேசி மூலமாக முறையிட்ட போது பொலிசார் அவரைக் கைது செய்துள்ளளதாகத் தெரியவருகின்றது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான குறித்த குடும்பஸ்தர் நோர்வே அரசாங்கத்தால் சிறிது காலம் புனர்வாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.