முல்லைத்தீவு 23 வயது யுவதிக்கு 49 வயது லண்டன் மாப்பிளையை !! அவளின் காதலன் செய்த வேலை!!
23 வயதான யுவதியொருவருக்கும், 49 வயதான புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கும் சத்தம் சந்தடியின்றி, எளிமையான பதிவு திருமணம் நடந்தது.
யுவதியின் காதலன் எனக்கூறும் இளைஞன் ஒருவர், தான் ஏமாற்றப்பட்டதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் சொந்த ஊருக்கு வந்து தங்கியிருக்கிறார்.
அவருக்கும், பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான யுவதியொருவருக்கும் கடந்த சில நாட்களின் முன்னர் சுகாதார முறைப்படி பதிவுத்திருமணம் நடந்துள்ளது.
பதிவு திருமணம் நடந்த போது, முள்ளியவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அங்கு சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
யுவதியை தான் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் வரை தன்னுடன் காதல் தொடர்பில் இருந்து விட்டு, திடீரென தொடர்பை நிறுத்தி இந்த திருமணத்தில் இணைகிறார்,
அவர் நம்பிக்கைத் துரோகமிழைத்து விட்டார், அவருடன் தான் நேரில் பேச வேண்டுமென அங்கு தகராற்றில் ஈடுபட்டார். அப்போது இளைஞன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இரு வீட்டாராலும் இளைஞன் அங்கிருந்து “அகற்றப்பட்டுள்ளார்“.
இதை தொடர்ந்து, தனது முகநூலில் இளைஞன் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டார். தனது காதலி வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது தந்தை வயதான ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும், தனக்கு நம்பிக்கைத்துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் சோக கீதம் இசைத்திருந்தார்.
எனினும், சில மணித்தியாலங்களிலேயே பதிவை அகற்றி, “எங்கிருந்தாலும் வாழ்க“ என பதிவிட்டுள்ளார்.

