புதினங்களின் சங்கமம்

க.பொ.த உயர்தரம், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்த திகதிகள் கல்வி அமைச்சினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய,

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் 03ஆம் திகதியும்,

உயர்தரப் பரீட்சை ஒக்ரோபர் 04ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் – கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா