புதினங்களின் சங்கமம்

கொழும்பில் எரியும் கப்பலில் இருந்து கட்டுக்கட்டாக கரைக்கு வரும் சொக்கலேட்டுக்கள்!! (video)

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்த X-PRESS PEARL கப்பலின் கொள்கலன் பாகங்கள்,
மற்றும் பல பொருட்கள், சொக்லேட் போன்ற சிற்றுண்டிகள் நீர்கொழும்பு, ஜா-எல, கபும்கொட,
சேத்தப்படுவ மற்றும் துங்கல்பிட்டிய கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன.

வீடியோவிற்கு இந்த இணைப்பை அழுத்தவும் 

https://fb.watch/5JUQNG3Gln/

கரையொதுங்கும் சொக்லேட் போன்ற தின்பண்டங்கள் மற்றும் பொருட்களை சேகரிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவல்படி, வத்தளையின் ப்ரிதிபுர தொடக்கம்
நீர்கொழும்பு வரையான 9 கிலோ மீற்றர் தூரத்திற்கு பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன், குப்பைகள் கரையொதுங்கியுள்ளன, அவற்றில் இரசாயனம்
கலந்துள்ளது என பொதுமக்களிற்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கப்பலின் தீயை அணைக்க பெல்- 212 உலங்கு வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீயை அணைக்க இன்று 425 கிலோகிராம் உலர் இரசாயன தூள் வீசப்பட்டது.

எனினும், நேற்றைய தினத்தை விட இன்று தீ அதிகரித்துள்ளது.

கப்பலின் முன் பகுதியில் பரவிய தீ, இப்பொழுது கப்பலின் அனேக பகுதிகளிற்கு பரவி
விட்டது. எனினும், கப்பலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படவில்லை, எண்ணெய் கசிவு குறித்த
தகவல்கள் இல்லையென கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷினி லஹந்தர
தெரிவித்தார்.

தீயை அணைக்க இரண்டு இந்திய கப்பல்கள் வந்துள்ளன. மோசமான வானிலை, கடற்கொந்தளிப்பால் மீட்பு
பணிகளில் தாமதம் உள்ளது.

கப்பலில் இருந்த 25 பணியாளர்களும் மீட்கப்பட்டள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு இந்திய
பிரஜைகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்
கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

May be an image of ocean and text that says "AIR FORCE"May be an image of body of water and text that says "AIR FORCE"May be an image of outdoors and text that says "AIR FORCE"May be an image of outdoors and text that says "AIRFORCE AIR FORCE"May be an image of standing, outdoors and textMay be an image of one or more people and ocean