நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி!! வீடியோ
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் எரிபொருள் நிரப்பிக்கொண்டு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சாரதி வீதியில் தூக்கி வீசப்பட்டு சிறுகாயங்களுக்கு உள்ளானார்.
அதேவேளை வீதியில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி தீ பற்றி எரிய தொடங்கியது. வீதியில் சென்றவர்கள் தீயினை அணைக்க முயன்ற போதிலும் முச்சக்கர வண்டி முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.