புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பாரிய விபத்து!! போக்குவரத்து சபை பஸ் நொருங்கி கவிழ்ந்தது(video)

பதுளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் கிளிநொச்சி இரணைமடுச் சந்திக்கு அருகில் தடம்புரண்டு பாரிய விபத்துக்குள்ளானது.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகம் காரணமாக குறித்த பேருந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

பாதையை விட்டு விலகிய பேருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. மிக மோசமானமுறையில் குறித்த பேருந்து செலுத்தப்பட்டுள்ளமை புலனாகின்றது. எனினும் குறித்த விபத்தின்போது ஒருவர் மாத்திரமே தெய்வாதினமாக சிறுகாயத்துக்குள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Image may contain: sky and outdoorImage may contain: one or more people, sky, cloud and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: one or more people, people standing, outdoor and natureImage may contain: outdoor