புதினங்களின் சங்கமம்

யாழ் இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் திருட்டு!இருவர் கைது!!

இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் திருடிய இருவர் பொலிசாரால் கைது.

நேற்று முன்தினம் நீராவியடி இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்துக்குள் பகல் வேளை புகுந்து பொருட்களை திருடிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசியதகவலின் அடிப்படையில் பொம்மைவெளியை சேர்ந்த இருவரை புலனாய்வு பிரிவினர் கைது செய்து யாழ்பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார். மேற்கொண்டுள்ளனர்

மண்டபத்தில் களவாடப்பட்ட பித்தளை பெரிய குத்துவிளக்கு 1
பித்தளை சிறிய விளக்கு 11அம்பிலிபயர் 1சில்வர் பொருட்கள் கதிரை 25ஆகியபொருட்களை பொம்மைவெளி இரும்பு கடையில் விற்பனை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள் குறித்த பொருட்களை மீட்கும் நடவடிக்கையினை போலீசார் முன்னெடுத்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதவானிடம் முட்படுத்தப்படவுள்ளார்கள்