யாழில் கந்துவட்டிக் காவாலி சயன்தனின் காவாலித்தனம் – சுன்னாகம் OIC யும் உடந்தை!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் சயந்தன் என்ற காவாலியால் சந்தையில் பணி புரியும் பழக்கடைக்காரர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் அந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியும் துணை போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சயந்தன் என்ற கந்துவட்டி காவாலியும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியாக பணியாற்றி தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணி புரியும் பிரசாத் என்ற காவாலி பொலிஸ் உத்தியோகத்தரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் சந்தையில் இரவு சாராயம் அருந்திக்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வந்த பழக்கடைக்காரனை சயந்தன் என்ற காவாலி தாக்கியுள்ளான். தாக்குதலுக்கு உள்ளான பழக்கடைக்காரன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பழக்கடைக்காரனை காவாலி சயந்தனும், பொலிஸ் காவாலி பிரசாத்தும் முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு மிரட்டினர்.
இருப்பினும் குறித்த பழக்கடைக்காரன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்று அங்கு விடுதியில் அனுமதிக்கப்பட்டு மூன்று தினங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் குறித்த பழக்கடைக்காரன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவாலி சயந்தனை கைது செய்யாது, அடுத்த கள்ளனான சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிறடோ , சயந்தன் என்ற காவாலியிடம் இலஞ்சத்தையும் பெற்றுவிட்டு, சாராயத்தையும் வாங்கி குடித்துவிட்டு பழக்கடைக்காரனை அழைத்து நீண்ட நேரமாக சமரசம் பேசி முறைப்பாட்டை மீளப் பெற்றுவிட்டு அனுப்பியுள்ளான்.
பழக்கடைக்காரன் கடைசிவரை நியாயம் கிடைக்காத நிலையில் செய்வது அறியாது புலம்பியவாறு வீடு சென்றுள்ளார்.
சயந்தன் என்ற காவாலி தான் ஒரு தாதா என்று கூறி மருதனார்மடம் பகுதியில் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை அங்கு இருப்பவர்கள் அறிந்த விடயமே. இதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலைய பிறடோவும் துணை போகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி காவாலியான சயந்தன் என்பவன் கந்துவட்டிக்கு பணத்தை கொடுத்துவிட்டு பின்னர் பலரைக் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி தாக்கி காணொளி எடுத்து மிரட்டிய வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் உள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியான பிறடோ கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தண்டனை இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் சுன்னாகத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை குறைவாக காணப்பட்டது. பின்னர் மீண்டும் பிறடோ பொறுப்பதிகாரியாக வந்த பினனர் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. காரணம் பிறடோ என்பவன் இலஞ்சம் பெற்றுவிட்டு குற்றச் செயல்களுக்கு துணை போகின்றமையே ஆகும். இந்நிலையில் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பிறடோ என்பவன் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் குற்றச்செயல்களை அதிகரிப்பதற்காகவா சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பிறடோ என்ற காவாலிக்கு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால நியமனம் வழங்கினார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. அநுரவின் ஊழல் அற்ற ஆட்சியின் சீத்துவக்கேடு இதுவா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியான பிறடோவுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும், பிறடோவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும், அதற்கும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

