புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கடமையாற்றும் விரிவுரையாளரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதனை அடுத்து அவருடைய குடும்பத்தாரையும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.