முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது இராணுவம் கடுமையான தாக்குதல்!
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட கடுமையான தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் பிரபல தமிழ் ஊடகம் உட்பட்ட ஊடகங்களுக்குப் பணியாளற்றும் விஷ்வலிங்கம் விஷ்வா என்ற ஊடகவியலாளரே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை படம் பிடிக்க முற்பட்டபோது அங்கு சென்ற இராணுவம் அவர் மீது கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் மயங்கியுள்ளார்.
வீதியில் கிடந்த அவரை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.
இராணுவ முகாமையோ, இராணுவத்தினரையோ படம் எடுக்கவில்லை என்றும் பெயர்ப்பலகையை மட்டுமே படம் பிடிப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும் இராணுவத்தினர் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
