Home புதினங்களின் சங்கமம் வட – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு தீவிர வெப்ப நிலை எச்சரிக்கை!

வட – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு தீவிர வெப்ப நிலை எச்சரிக்கை!

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை ஆபத்தான அளவில் உயருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இலங்கை வளமண்டலவியல் திணைக்களம் நாட்டின் சில பகுதிகளுக்கான வெப்ப குறியீட்டு ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மனித உடலில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை (Extreme Caution level) வரை அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்தக்கொள்ள திறந்த வெளிகளில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிகளவு நீராகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடையை அணிந்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.