புதினங்களின் சங்கமம்

யாழில் கணனியில் தகாத வீடியோ பார்த்த பிரபல பாடசாலை 14 வயது மாணவனும் நண்பர்களும் தந்தையால் நையப்புடைப்பு!!

யாழில் கணனியில் தகாத வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த யாழ் நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் 14 வயது மாணவனையும் அவனது நண்பர்கள் மூவரையும் குறித்த மாணவனின் தந்தை நையப்புடைத்த சம்பவம் நேற்று நல்லுார் பகுதியில் இடம்பெற்றுளளது. குடும்பத்தினர் வல்லிபுர ஆழ்வார் தீர்த்த திருவிழாவுக்கு சென்ற பின் ரியூசனுக்கு  செல்ல வேண்டும் என கூறி வீட்டில் நின்ற குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் இணைய தொடர்பு உள்ள கணனியில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். இந் நிலையில் கோவிலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக குடும்பத்தினர் குறித்த நேரத்துக்கு முன்னரே வீட்டுக்கு வந்துள்ளார்கள். வீட்டு முற்றத்தில் சில சைக்கிள்கள் நின்றதை அவதானித்த மாணவனின் தந்தை வாகனத்தை கேற்றைத் திறந்து உள்ளே விடாது வெளியே விட்டுவிட்டு  தனியே வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அறை ஒன்றினுள் தனது பிள்ளையும் வேறு 3 நண்பர்களுமாக சேர்ந்து கணனியில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். அதன் பின்னர் தனது பிள்ளை மற்றும் அவனது நண்பர்களை தந்தை தும்புத்தடியால் நையப்புடைத்ததாக தெரியவருகின்றது.

காயங்களுக்கு உள்ளான நண்பர்கள் 3 பேரும் சைக்கிள்களை விட்டுவிட்டு ஓடித்தப்பியுள்ளார்கள். அதன் பின்னர் அன்று இரவு அடிவாங்கயி குறித்த மாணவர்களின் உறவுகள் அங்கு வந்து வாக்குவாதம் செய்ததாகவும் தெரியவருகின்றது. அவர்களுக்கு நடந்த விடயத்தை சொன்ன பின்னர் அவர்கள் எந்தவித வாக்குவாதமும் செய்யாது சைக்கிள்களைக் கொண்டு சென்றதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். தந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்ட மகன் கால்கள் நடக்கமுடியாதவாறு உள்ளதாகவும் இன்று பாடசாலை செல்லவில்லை என்றும் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x