புதினங்களின் சங்கமம்

சாய்ந்தமருது தாக்குதல்!! நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட ஆண், பெண் சடலங்கள் (Photos)

சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு
முழுமையாக சோதனையிடப்பட்டுள்ளது. அங்கிருந்த 15 உடல்கள் மீட்கப்பட்டன.
துப்பாக்கி மோதல், தற்கொலை குண்டு தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர்.

நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்கிறார்.

முன்னைய செய்தி- 6 குழந்தைகள் உட்பட 15 சடலங்கள்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மோதலில் உயிரிழந்த 15 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 4 தற்கொலைதாரிகளின் உடல்களாக இருக்கலாமென
தெரிகிறது.

மீட்கப்பட்ட 15 உடல்களில் 6 உடல்கள் குழந்தைகளுடையவை. ஏனையவை 6 ஆண்கள், 3 பெண்களின் சடலங்கள்.

இதேவேளை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கிறது.