புதினங்களின் சங்கமம்

தற்கொலைதாரிகளுடன் தொடர்பு!! ஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..! 4 பேருக்கு வலைவீச்சு!!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சந்தேகநபர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் விமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றும் மேலும் நான்கு பேர் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.