யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்றர்கள் மூடப்பட்டன!! பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று அச்சம்!!
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்
யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருக்கலாமென எச்சரித்துள்ள பொலிசார், சோதனை மற்றும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து, மாவட்டரீதியிலான பாதுகாப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு
வருகிறது. யாழ் மாவட்டத்திற்கான கலந்துரையாடல் நேற்று நடத்தப்பட்டது. முப்படை
அதிகாரிகள், பொலிசார், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திலேயே பொலிசார், இந்த
எச்சரிக்கையை விடுத்தனர்.
இந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாணவர்கள் கூடும் தனியார் கல்வி
நிலையங்களை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானித்தனர்.
பிரதேசசெயலர்கள், கிராம அலுவலர்கள் தமது நிர்வாக எல்லைப்பரப்பிற்குள் நிற்க வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினர் திடீர் சோதனைகளில் ஈடுபடுவார்கள்.