புதினங்களின் சங்கமம்

யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உடனடி இடமாற்றம்!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய  காளிங்க ஜெயசிங்க உடனடியாக நடமுறைக்கு வரும்வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். இவர் தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கொழும்புக்கு கிடைக்கப் பெற்றதாக தெரியவருகின்றது. கள்ளக்காணி எழுதும் சட்டத்தரணிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பணக்காரக் காவாலிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு சட்டத்திற்கு புறம்பானமுறையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

நேர்மையாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிசாரை இவர் இடமாற்றியிருந்தாகவும் ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.