புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபை சுகாதாரப்பகுதி ஊழியர்கள் பஸ்கரிப்பு!!

 

யாழ் மாநகரசபை சுகாதரப்பகுதி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள் மாநகரசபை வட்டாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அவர்களுக்கான அலுவலகங்களில் விரல்ரேகைப் பதிவில் பதிந்தே வரவு கணிக்கப்பட்டு வந்துள்ளது. குறித்த வட்டாரங்களின் அந்த விரல் ரேகை இயந்திரங்கள் ஒரே தடவையில் செயலிழந்து போய்விட்டதால் அது தொடர்பாக யாழ் மாநகரசபை நிர்வாகம் ஊழியர்களிடத்தில் சந்தேகம் கொண்டு அவர்களிடத்திலேயே அந்த இயந்திரத்திற்கான பணத்தை அறவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் குறித்த சுகாதார ஊழியர்கள் விசனமுற்றே இந்த பஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ் மாநகரசபை ஆணையளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோ பெரும் ஊழல் புரிவதாகவும் அமைய அடிப்படையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் சனி, ஞாயிறு தினங்களிலும் வந்து எந்தவித விரல் பதிவும் இல்லாது கையெழுத்திட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்வதாகவும் அந்த பணத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஆணையாளர் அல்லது பிரதி ஆணையாளர் பெறுகின்றார்களா?? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பஸ்கரிப்பு ஊழியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

யாழ் மாநகரசபை என்பது ஊழல்களின் மொத்த வடிவம் என்பதுடன் அங்கு புதிதாகக் கடமையாற்ற வரும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை அங்குள்ள சில பெருச்சாளிகள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றி அவர்களையும் தங்களுடன் ஊழல் புரியும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார்கள் என பல தரப்புக்களும் சுட்டிக்காட்டியிருந்தன…. யாழ் மாநகரசபையின் ஊழல் பெருஞ்சாளிகள் சிலரின் செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக வெளியிடவுள்ளோம்.