புதினங்களின் சங்கமம்

கஞ்சிப்பானையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் யாழிற்கு இடமாற்றம்!! அலங்கோலம் தொடரும்!!

கஞ்சிப்பானை தொடர்புபட்ட பொலிஸ் எல்லாரையும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு மாற்றுப்பட்டுள்ளார்கள்…

லோகதயாளன் தந்தை செல்வா விமானநிலையம்…

கஞ்சிப்பான இம்ரானுடன் தொடர்பில் இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று உப பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த மூன்று உப பொலிஸ் பரிசோதகர்களுக்கே இவ்வாறு இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பிறந்த நாள் கொண்டாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் விசாரணைகள் தடை ஏற்படாத விதத்தில் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.