முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா அதி வீரியம் கூடியது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்றும் அதனால் அது நிறையப்பேருக்கு பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கொரோனா நிலவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தொற்றாளருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோன ஏனைய வகை கொரோனாக்களை விடவும் அதி வீரியம்கூடியது.

இதனால் அங்கு பலருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான ஏது நிலை காணப்படுகின்றது.

அதேவேளை, இந்த வகை கொரோனாத் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

எனவே புதுக்குடியிருப்பில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த சிரத்தையெடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள், அதேவேளை இதுவரை குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருக்காதவர்கள் உங்களை சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

அதேவேளை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றிக்கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

error

Enjoy this blog? Please spread the word :)