யாழ்ப்பாணத்தில் காவாலிக் கும்பலால் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்க்பபட்ட வாகனங்கள்!!
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை வைக்கப்பட்ட தீயினை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு , வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை கண்ணுற்ற வீட்டார் தீயினை அணைக்க முயன்றனர். அதன் போது , வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.