புதினங்களின் சங்கமம்

வடபகுதியிலிருந்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது!!

கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் களப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வந்திருந்த வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த உணவு மற்றும் உடைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.