புதினங்களின் சங்கமம்

யாழ்.மாவட்ட காணி அலுவலகத்துக்குள் நடந்த அலங்கோலங்கள்!! (Photos)

யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலக நான்கு மாடிகளை கொண்ட கட்டிடத்திற்குள் நேற்று (25) இரவு பெய்த கடும் மழையினால் மழை நீர் உட்புகுந்துள்ளது.

வெள்ளம் உட்புகுந்த குறித்து அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தற்போது அலுவலகத்துக்குள் இருந்து வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில் அலுவலகத்தை சுற்றி வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக திணைக்கள சேவைகள் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.