புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவில் பகுதியில் விபச்சாரம் செய்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது!!

யாழ்.கொக்குவில் – பொற்பதி வீதியில் வீடொன்றில் சமூக பிறழ்வான நடத்தை..! இரு பெண்கள்
உட்பட 4 பேர் கைது..

யாழ்.கொக்குவில் – பொற்பதி வீதியில் உள்ள வீடொன்றில் சமூக பிறழ்வான செயற்பாடு
இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு பெண்கள் உட்பட 4 பேர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர் இன்று குறித்த வீட்டை முற்றுகையிட்டு யாழ்ப்பாணம்
மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இருவரும் (28,38 வயதுடையவர்கள்) ஆண் ஒருவரும் விடுதி
உரிமையாளரும் என

4 பேரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
முற்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் நால்வரும் நாளை யாழ்ப்பாணம் மேலதிக
நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.