யாழ் காரைநகருக்குள்ளும் புகுந்து தாண்டவமாடியது கொரோனா!! சிறுவர்கள் 4 பேருக்கும் தொற்று!!
யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பத்துப் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை பிசிஆர் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சுகாதார உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில்,
10, 11, 14 வயதுகளை உடைய சிறுமிகளும் 12 வயதுடைய சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

