பூநகரி விபத்தில் சிக்கி கிராமசேவகரும் மனைவியும் மரணம்!!
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதி கிராம அலுவலர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது 48), அவருடைய மனைவி ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரிக்குச் சென்றுவிட்டு முழங்காவில் திரும்பிக்கொண்டிருக்கும் போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியபோதே விபத்து நிகழ்ந்துள்ளது.
கிராம அலுவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த போதிலும் மனைவி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (25) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


