புதினங்களின் சங்கமம்

திருத்தம்!! யாழ் மருதனாமடத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று!! யாழ்ப்பாணம் முடக்கப்படலாம்!!

மருதனார்மடம் சந்தையில் 258 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட
பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி
வெளியிட்டுள்ளார்.

*இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால்
அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பத்தலைவரின் மனைவி (வயது-38) மகள் (வயது-12),
மகன்கள் (6 மற்றும் 3 வயதுடைய) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர்
(வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதேவேளை, முடிவுகள் பெற முடியாத சந்தேகத்திற்கிடமான மாதிரிகளின் அடிப்படையில்,
முன்னர் 31 பேருக்கு கொரோனா தொற்று எனகுறிப்பிட்டிரு ந்தது.

தற்போதைய திருத்தப்பட்ட இறுதி நிலவரத்தின்படி, 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
106 பேரின் மாதிரிகள் முடிவு தெரியாத நிலையில் உள்ளன. அவை நாளை மீண்டும் இரண்டாவது
தடவையாக சோதனைக்குள்ளாக்கப்படவுள்ளன.

மருதனார்மடத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரும், பிறிதொரு முச்சக்கர வண்டி
சாரதியும் முதலாவது பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவை பெற்றனர். இரண்டாவது
பரிசோனையில் மருதனார்மட நபர் தொற்று உறுதியானார். மற்றையவர் தொற்றிற்குள்ளாகியிருக்கவில்லை.

*முன்னைய செய்தி :யாழில் சமூகத்தொற்று: மருதனார்மடத்தில் 31 பேருக்கு கொரோனா!*

யாழ்ப்ப்பாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மருதனார்மட சந்தை வியாபாரிகள் 24 பேர், நேற்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் 7 பேர்
தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.