முயல்வேகத்தில் சென்ற அனுராவை ஆமை வேகத்தில் முன்னேறும் சஜித் வெல்லும் சாத்தியம்??
தமிழர் பகுதி வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டு வெளி வந்துள்ள நிலையில், ஜனாதிபதியாக யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தபால்மூலமான வாக்குகளில் 53 வீதத்துக்கு மேல் பெற்ற அனுராவை விட தற்போது சஜித் மெதுமெதுவாக முன்னோக்கிக் கொண்டு வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலை தொடர்ந்தால் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.