நாளை ஜனாதிபதியாக அநுரா பதவியேற்பு!!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நாளை (23) காலை 9 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. . ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறித்த செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளன.ஜனாதிபதியாகப் பதவியேக்கவுள்ள அவருக்குப் பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது வேளை அனுர மற்றும் சஜித்துக்கு இடையிலான வாக்குகள் வித்தியாசம் 13 இலட்சங்கள் ஆகும் . இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் இதனை தாண்டுவது சாத்தியம் இல்லை அனுரவின் வெற்றி உறுதியானது . அனைவரும் பொறுமையாக காத்திருங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத்

