புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் விபத்து!! !! (Photos)

மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் சித்தாண்டி பிரதேசத்தில் மரக்கறி லொறியொன்று மின்கம்பத்தில் மோதி தடம் புரண்டு வீதியோர வடிகானில் விழுந்துள்ளது. இதையடுத்து சித்தாண்டி பிரதேசத்திற்கான மின்விநியோகம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.
தம்புள்ள பகுதியிலிருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்வேளை திடீரென டயர் ஒன்று கழன்றதனால் லொறி கட்டுப்பாட்டை இழந்ததாக அதன் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் மின்கம்பமும் முறிந்துள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.