Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் இன்று அதிகாலை கோர விபத்து!! ஒருவர் பலி!! இரண்டு பேர் காயம்!! (Photos)

வவுனியாவில் இன்று அதிகாலை கோர விபத்து!! ஒருவர் பலி!! இரண்டு பேர் காயம்!! (Photos)

வவுனியா, விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று(30.11.2019) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.இதன்போது ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வாகனம் மாடு ஒன்றுடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: outdoor and natureImage may contain: one or more people, car and outdoorImage may contain: car, tree and outdoor