தொண்டமனாறு தடுப்பு கதவுகளுக்கு மேலாக கடல் மட்டம் உயர்ந்து கடல் புகுந்தது!!
தொண்டமனாறு தடுப்பு கதவுகளுக்கு மேலாக கடல் மட்டம் உயர்ந்து குடிமனைகளுக்குள் கடல் புகுந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற. இதே வேளை தற்போது வரை மாங்குளத்தில் 125.5mm மழை கிடைத்துள்ளது. வல்வெட்டித்துறை கம்பர்மலைப் பிரதேசத்தில் அடித்த சூறாவளியால் வீடுகளின் ஓடுகள், கூரைகள், கதவுகள் துாக்கி வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
சிறுமி உட்பட்ட நால்வர் காயம் அடைந்த நிலையில் மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன.
திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
திடீர் அனர்த்தம் காரணமாக வீடு ஒன்றின் இருந்தபோது கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் அதே பகுதியைச் சேர்ந்த பீற்றர் மஹிந்தன் (வயது 35) என்பவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதால் இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து செய்தியாளர் கூறுகின்றார்.
வட பகுதியில் முல்லைத்தீவு ஐயங்கன் குள பிரதேசத்தில் இதுவரை 219mm மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் விரைவில்….

