புதினங்களின் சங்கமம்

யாழ் கச்சேரிக்கு அருகில் ‘ரவி‘ சாராயக்கடையில் ஊரடங்கு நேரமும் விற்பனை அமோகம்!!(Photos)

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு போட்டு இருந்த நிலையிலும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைரஸை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மதுபான சாலைகளை திறக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘ரவி றெஸ்ரோறன்ட்‘ என்ற பெயரில் இயங்கும் குறித்த சாராயக்கடை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்திலும் இவ்வாறு சாராயத்தை விற்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்….

இந்த சூழ்நிலையிலும் இவ்வாறு பொறுப்பற்று நடக்கும் ஒரு சிலரால் யாழ் மாவட்டத்தை வைரஸ் பிரச்சனையிலிருந்து யாராலும் பாதுகாக்க முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

Image may contain: one or more people, tree, sky, plant and outdoorImage may contain: sky, tree and outdoor