கிளிநொச்சியைப் புரட்டிப் போடுகின்றது புரவி!! (Video)
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கோணாவில் மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளில் மழையுடனான பலத்த காற்றினால் பயன்தரு மரங்கள் முறிந்ததுடன் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயன்தரும் 10க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் 5 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் அழிவடைந்துள்ளன.
இதேபோன்று விவசாய வயல் நிலங்களும் பாதிப்பினை சந்தித்துள்ளன.,
இதே வேளை காற்றுடன் கூடிய மழை தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து கொண்டிருப்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், அடுத்த 36 மணி நேரம் பொது வானிலை முன்னறிவிப்பு; இன்றிரவு: 200 மிமீ மழை வீழ்ச்சி மிகவும் வலுவான காற்று (80-90) KMPH எதிர்பார்க்கப்படுகிறது எனவும், கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அனர்த்தம் ஏற்படும் நிலைமையில் அவசர தேவையின் பொருட்டு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பிரதேச செயலகம் கேட்டுக்கொண்டுள்ளதுடன் அங்கு நடந்த அனர்த்தங்களை புகைப்படங்களாகவும் வெளிியிட்டுள்ளது.
0212060300
0779708458














