கொரோனா தொற்றினால் மூடப்பட்ட நோதேர்ன் வைத்தியசாலையில் கள்ளத்தனமாக சிகிச்சை!!
கொரோனா தொற்றுக்குள்ளானவர் புகுந்து திரிந்ததாக கூறி மூடப்பட்ட திருநெல்வேலி நொதேர்ன் வைத்தியசாலையில் சற்று முன்வரை பின் வாசல்வழியாக பொதுமக்கள் சிகிச்சைக்கு உள்ளே சென்று வருவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வைத்தியசாலையில் பின்பகுதி வாசல் சிவன் அம்மன் வீதியில் உள்ளது என்றும் அந்த வாசல் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்களும் உள்ளே சென்று வருகின்றார்கள் எனவும் கர்பிணிகளுக்கு கூட அங்கு கிளினிக் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறையினருக்கு இது சமர்ப்பணம்….

