புதினங்களின் சங்கமம்

காரைநகர் நபருக்கு கொரோனா!! யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலை ஒன்று முடக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் மூளாய் கூட்டுறவு வைத்தியாசலை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் காரைநகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்திருந்தது.

குறித்த நபர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு சென்று திரும்பியதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகளால் வைத்தியசாலை முடக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.