புதினங்களின் சங்கமம்

தமிழர்களுடன் ஜே.வி.பி நடாத்திய திருவியைாடல்கள்!! போட்டுடைக்கின்றார் சிவாஜிலிங்கம்!! உண்மையா?

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்க்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (20) தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது. அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை, பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று, இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை, 13 வது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

இது முதலாவது அடி, இரண்டாவது ஐக்கியநாடுகள் பொதுச் சபையிலே, மனித உரிமை பேரவையிலே அங்கு வந்த தீர்மானத்திலே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை மறுத்து இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அதனை மறுத்து உள்ளக விசாரணைதான் என கூறியிருக்கின்றார். ஆகவே இதில் என்ன தெரிகிறது என்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் சர்வதேசத்திற்கும் உதவ தயாராக இல்லை, இதை நம்பி எங்களுடைய மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத் தேர்தலில் இறங்கியுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையின் பின்னணியிலேதான் அவர்களுடைய அந்த அமைச்சரவையில் இருக்கக் கூடிய. அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் ஜனாதிபதியின் கருத்துக்கள் தான். வெளிவிவகார அமைச்சகமும் இவ்வாறு கூறியிருக்கின்றது என்றால் இதைவிட என்ன கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன.

புதுமையான இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டும், இதுவரை தேர்தல்களில் விருப்பு வாக்கு அழிக்கப்படாது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கப்படும், ஆனால் இம்முறை விருப்பு வாக்குகளை வருகின்ற வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இது பேரினவாத கட்சிகளைப் போன்று அடிஎடுத்து வைக்கின்றது என்பதைச் சொல்கிறது.

ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை  விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.

2004 ம் ஆண்டு வீசிய கடற்கோள் அதாவது சுனாமியின் பின் சர்வதேச சமூகமும்,  இலங்கை அரசும் இணைந்து சுனாமியின் பின் அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தார்கள் பீரொம்ஸ். அதாவது post tsunami operational management structure சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமானம். பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு அவற்றை எல்லாம் செயற்படுத்தப்படுகின்ற பருவம் வருகின்றபோது அதனுடைய தலமைச் செயலகம் கிளிநொச்சியிலே அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கு எதிராகவும் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்தவர்கள். அதைவிட கொழும்பிலேயும் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் செய்தவர்கள் ஜேவிபியினர். இவ்வாறு இருக்க ஜே.பி.விபியினருக்கு  நீங்கள் வாக்களிக்க முயன்றல் அது எங்களை அகல பாதாளத்தில்தான் கொண்டு சென்று விடும் என்பது எனது தாழ்மையான கருத்து என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x