கிளிநொச்சியில் மகனின் மோட்டார் சைக்கிளை திருடிய குடிகாரத் தந்தையை நடு வீதியில் துரத்தி அடித்த மகன்!! (video)

மகனின் மோட்டார் சைக்கிளைத் திருடி அடகு வைத்து மது அருந்திய தந்தையை அவரது மகன்
இரும்புக் கம்பி கொண்டு ஓட ஓடத் தாக்கிய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்று முன்தினம்
இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகன் வேலைக்குச் சென்றதைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை மகனின் மோட்டார் சைக்கிளைத் திருடி
12 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து அந்தப் பணத்தில் மரு அருந்தியுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய மகன் தனது மோட்டார் சைக்கிளைக் காணாது அதிர்ந்து போய்
தேடி வந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிள் தந்தையால் அடகு வைக்கப்பட்டதை அறிந்து கொண்டார்.

இதனால் விரக்தியடைந்த அவர் தந்தையை வீதியால் துரத்தித் துரத்தி கம்பியால் தாக்கினார்.
பலத்த காயமடைந்த தந்தையை அயலவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அவர் அங்கியிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாhவட்ட மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டார்.

error

Enjoy this blog? Please spread the word :)