இளம் குடும்பஸ்தரை வெட்டிக் கொன்ற இளம் குடும்பப் பெண்!! முல்லைத்தீவில் சம்பவம்!!

முல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவரை, இளம் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக்
கொன்றுள்ளார். கொலையை செய்த இளம்பெண், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் நேற்று (19) இரவு முள்ளியவளை, முறிப்பில் கிராமத்தில் நடந்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் (32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இருவரிற்கிடையிலான மோதல் இடம்பெற்றதாகவும், இதன்போது மோதலில் ஈடுபட்ட ஒருவருக்கு
துணையாக களமிறங்கிய குறிப்பிட்ட இளம் குடும்பப் பெண் நடத்திய தாக்குதலில், நிரோசன்
என்பவர் உயிரிழந்தார்.

குடும்பத் தலைவரின் தலையில் இரண்டு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்றும் இது
தொடர்பில் மேலதிக விவரங்களை நடத்துவதாகவும் முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோதலிற்கான காரணம் என்ன என பொலிசார் இதுவரை குறிப்பிடாத போதும், சாதிய முரண்பாட்டால்
மோதல் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

error

Enjoy this blog? Please spread the word :)