புதினங்களின் சங்கமம்

ஆணையாரை தடவித் தடவி யாழ் மாநகரசபையில் பல மில்லியின் களவெடுத்த ஜெயராசசிங்கம் குழு!! அதிர்ச்சித் தகவல்கள்!

யாழ் மாநகரபையின் வருமானவரி அறவிடும் பகுதியில் மில்லியன்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏ்ற்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையில் ஊழல்கள் மோசடிகளின் முதலிடமாக யாழ் மாநகரசபை இருந்து வருகின்றது. யாழ் மாநகரசபைக்கு வரும் ஆணையாளர்களை அவர்களின் வழியில் சென்று அவர்களுக்கு தகுந்தது போல நடித்து ஊழல்கள் புரிவதில் அங்கு நிரந்தரமாகப் பணியாற்றுபவர்கள் கில்லாடிகளாக இருந்து வருகின்றார்கள். அத்துடன் புதிதான நல்ல நிலையில் வரும் ஆணையாளர்களைக் கூட தங்கள் வழிகளுக்கு மாற்றிவிடுவதில் அவர்கள் கில்லாடிகள். யாழ் மாநகரசபையின் ஊழல் பெருச்சாளிகளின் முக்கிய புள்ளி பிரதம வருமானவரிப் பரிசோதகராக உள்ள ஜெயராஜசி்ங்கம் என்பவனே. இவனுக்கு கீழ் இயங்கும் மாநகரசபைப் பணியாளர் குழு ஒன்றே யாழ்மாநகரசபையை அலங்கோலப்படுத்துவதிலும் ஆணையாளர்களாகவும் வேறு பதவிநிலைகளில் இருந்து வருபவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவருவதிற்கும் இவனே முக்கிய காரணகர்தாவாக உள்ளான்.

யாழ் மாநகரசபையில் உள்ள ஊழல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ”பற்றியெரியும் தீப்பிளம்பின் ஊடாக பெற்றோலைக் கடத்துவதில் வல்லவர்கள்”. புதிதாக வரும் அதிகாரிகள் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர்களை தமக்கு வாலாட்ட வைப்பதில் வல்லவர்கள். தற்போதைய ஆணையாளர் கவிதை எழுதுவதில் கொஞ்சம் திறமைசாலி என்பதால் அவரது கவிதையைப் புகழ்ந்துபாடியே தமது ஊழல்செயற்பாட்டை செய்து முடித்துவிடுவார்கள்.

 

இவ்வாறான ஊழல்வாதிகள் உள்ள யாழ் மாநகரசபையில் உதவி ஆணையாளராக இருக்கும் சீராளன் என்பவனுக்கு உள்ள பெண் வீக்னசைப் பயன்படுத்தி பல்வேறு பட்ட செயற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்துள்ளார்கள். ஏற்கனவே பௌதீகத் திட்டமிடல் பகுதியில் பல மில்லயன் ரூபாக்களை தன்வசப்படுத்திக் கொண்ட இளம்குடும்பப் பெண்ணும் குறித்த சீராளனின் உறவினர் என்பதும் சீராளனே அந்தப் பெண்ணை அங்கு கடமை புரிய வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த பெண் பெருமளவு பணம் சுரண்டியதை கண்டு பிடித்த உள்ளகக்கணக்காய்வாளரையே இடமாற்றிய பெருமை யாழ் மாநகரசபை நிர்வாகத்தைச் சாரும்.

இவ்வாறு பல்வேறான பெரும் மோசடிகள் யாழ் மாநகரசபையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தற்போது வருமானவரிப்பகுதியில் பலமில்லயன் மோசடி இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியான நிர்வாகத் தலைமைத்துவம் இல்லாத நிலையிலும் நிர்வாகத்தலைமைத்துவங்களின் பலவீனத்தை அறிந்து அவர்களைக் குழப்பும் பெரும் ஊழல்பெருச்சாளிகள் இருக்கும் நிலையிலும் யாழ் மாநகரசபையை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது உறுதி. யாழ் மாநகரசபை தொடர்பாக தற்போதய வடக்கு மாகாண ஆளுநர் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

குறிப்பு – தற்போதய யாழ் மாநகரசபை ஆணையாளர் மூலக்கொதி உள்ளவர் போல் சுடுதண்ணிப் பிரக்கிராசி போல் காணப்படுவதாக ஊழியர்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஜெயராசசிங்கம் குழு இவ்வளவு நிதியையும் ஊழல் செய்துள்ளது என்றால் அவர்களின் திறமையை பார்த்து வேறு நிறுவன ஊழல்வாதிகளும் அவர்களிடம் வகுப்பு எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும்.