புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இஸ்ரேலில் ஜேர்மன் யுவதியை நிர்வாணமாக்கி கொன்ற ஹமாஸ் போராளிகள்!! வீடியோ

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் போராளிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.உயிரிழந்த ஷானி லோக்கின் நிர்வாண உடலை காலால் மிதித்தபடி டிரக்கில் ஹமாஸ் போராளிகள் கொண்டு சென்றபோது, காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் அந்த உடல் மீது எச்சில் துப்பி அவமரியாதை செய்கின்றனர். அப்போது, இதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்றனர்.அந்த உடல் இஸ்ரேல் பெண் சிப்பாய் என பாலஸ்தீனியர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டனர். அவர்கள் அப்படி நினைத்துத்தான் இறந்த உடலை காசாவுக்குள் கொண்டு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதான தெரிகிறது.