புதினங்களின் சங்கமம்

வவுனியா கல்வி வலய கோடிக்கணக்கான ரூபா மோசடி !! ஆமை வேகத்தில் விசாரணை!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் உரியவர் மீது எடுக்கப்படாதபோதும் வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் முகாமைத்துவ உதவியாளராக நியமனம் பெற்ற நிலையில் கல்வித் திணைக்களத்தின் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டபோது சம்பளத்தின் உண்மைப் பெறுமதியை உரியவர்களின் கணக்கில் வைப்புச் செய்தபோதும் மேலதிகமாக கணக்கிட்ட தொகையை வங்கியின் ஊடாக தனது கணக்கில் வைப்புச் செய்து மோசடியில் ஈடுபட்டார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மேற்கொண்ட கணக்கு நடவடிக்கைகள் யாவும் மீளாய்வுக்கு உட்படுத்தும் பணி துரிதமாக இடம்பெற்றது. இதன்படி இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெறுமதி ஒரு கோடியே 96 இலட்சம் ரூபா என பொலிஸாருக்கு அறிக்கை சமரட்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சமர்ப்பித்த வாக்குமூல நடவடிக்கையுடன் விடயம் உள்ள போதும் மோசடியில் ஈடுபட்டவர் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவர் கைதுசெய்யப்படவோ இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் இவ்விடயம் தொடர்பில் திணைக்கள ரீதியாக ஐவர் அடங்கிய ஒரு குழுவை விசாரணைக்காக நியிமித்தார். அந்தக் குழு நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.