சுமந்திரன் மீது மகிந்தவுக்கு என்ன ஒரு அக்கறை!! நடந்தது என்ன?
நேற்று சுமந்திரனை தொடர்புகொண்ட எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, “கிறிஸ்தவரான உங்களைப்போல ஒருவரை தாக்குவதற்கு திட்டமிடுகிறார்கள். உடனடியாக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்” என கரிசனையுடன் சொல்லியிருக்கிறார்.
எவ்வளவு நல்ல மனசு இரண்டு பேருக்கும்.
எங்கட உப்பு சாப்பிட்டு அதனை மறந்த மைத்திரிக்கும், தமிழர்களின் ரத்தம் சாப்பிட்ட மகிந்தவுக்கும் சுமந்திரனில் எவ்வளவு அக்கறை? எத்தனை தனிப்பட்ட அக்கறை? இப்படிப்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி தமிழர்கள் அடைந்தது என்ன?
நவாலி தேவாலயத்தில் குண்டு போட்ட அதே சந்திரிகா தான், சம்பந்தருக்கும் Bullet Proof காரை பரிசாக கொடுத்தார்.
இப்படி தனிப்பட்ட கவனிப்புகளை சரியாகவே செய்கிறார்கள்.
ஈஸ்ரர் தாக்குதலை வைத்தே, அந்த இடைவெளியில், தாங்கள் வெள்ளைப்பிள்ளைகளாக வெளிநாடுகளுக்கு காட்டி,
தமிழர்களின் எஞ்சிய காணிகளை வனராசிகள் திணைக்களத்திற்கோ அல்லது அரும்பொருள் திணைக்களத்திற்கோ என சொல்லி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
அதனை கடுமையாக எதிர்ப்பதாக நாற்பது மைக்குகளை வைத்து “அவன்” “இவன்” என பேசுவார்கள். அடுத்த நாள் அவர்களுடன் இருந்து அப்பம் சாப்பிடுவார்கள்.
இப்படித்தான் தமிழர்கள் தலைவிதி இன்று.
நன்றி
முகப்பக்கம்