ஓட்டை போட்ட உழுந்து வடையும் யாழ்ப்பாண PHIமாரும் ( வயதானவர்களுக்கு மட்டும் விளங்கும்)

யாழ்ப்பாணத்தில் உள்ள சில PHIமார் உணவுப் பாதுகாப்பு விசயத்தில் சரியான கடும் பிடி என்று கேள்வி. அதுவும் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் தயாரிப்பவர்கள் நல்ல ”நீற்றா” இருக்க வேண்டும் என்டு கடுமையாக இருக்கினம். அதுவும் ஓலைக் கொட்டிலுக்குள் சாணி மெழுகிய அடுப்பில் இடியப்பம் அவிச்சு கடைகளுக்கு கொடுப்பதை கூட தடுத்து நிறுத்தியிருக்கினம். சாணி மெழுகாமல் அந்த இடத்துக்கு ”ரைல்ஸ்” பதிச்சாத்தான் இனி நீ சமைக்கலாம். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் நிறுத்துவம் என்று சொல்லி ஒரு கஸ்டப்பட்ட மனிசியை எச்சரித்து விட்டிருக்கினம். இது மிகவும் சந்தோசமான விசயம்தான். ஆனால் தென்பகுதியில் உள்ள உணவு தயாரிக்கும் இடங்கள், தெருவோர உணவுக் கடைகளில் அந்த அந்த இடத்து சிங்களப் PHIமார் இவ்வளவு கடும்பிடி காட்டுறேலையாம். அதால யாழ்ப்பாணத்தில பலருக்கு வயித்தாலையடியும் வந்து கொண்டிருக்கு. என்னடா இது பனையில தேள் கொட்டினால் தென்னையில நெறி கட்டுது என்டுதானே நினைக்கிறீங்கள்….. அது ஒன்டுமில்லை பாருங்கோ… இப்ப தின்னவேலி சந்தைப் பகுதிகளில் உள்ள கடைகளில தேங்காயெண்ணை லீற்றர் 600 ரூபாவுக்கும் குறைவாக விக்குறாங்கள். அந்த எண்ணையை வாங்கிப் பொரிச்சு சாப்பிட்ட பலருக்கு இப்புடி வயித்தால அடிக்குது என்டு பரவலா கதைக்கிறாங்கள். இதில உண்மை பொய் என்னவென்டு தெரியாது.

இந்த நேரத்தில நம்ப PHIமார் சிலரை நக்கலடிச்சு கதை ஒன்டு உலா வருகுது…… இது கதைதான்… உண்மை இல்லை என்டு மட்டும் சொல்லிப் போட்டன்…

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் ஒற்றைக் கையை இழந்த ஒருவர் ஒருவர் சாப்பாட்டுக் கடை முதலாளியா இருக்கிறார். அவரிட கடையில சுடுகிற உழுந்து வடை, பருப்பு வடை நல்ல ருசி. ஒரு PHI அதை அறிந்து அந்தக் கடை வடையை ருசித்து பார்க்க அங்க போயிருக்கிறார். உழுந்து வடையை ஓடர் கொடுத்துட்டு இருந்திருக்கிறார். வடையும் வந்திச்சு. வடை ஓரளவு பெரிசா இருந்தாலும் அந்த வடையின் அளவிலும் பார்க்க வடையின் ஓட்டை ஓவர் பெரிசா இருந்திச்சு. ”கள்ள வடுவா உழுந்து விலை கூடிய நேரத்தில இப்புடி ஓட்டையை பெரிசாக்கி வடையில் உழுந்தின் அளவை குறைச்சிட்டான்” என பொருமிக் கொண்டு அந்த வடையை PHI சாப்பிட்டிருக்கிறார். வழமையான வடையிலும் பார்க்க இவரின் கடை வடை வித்தியாசமான சுவையுடன் நல்லா இருந்திருக்குது. பல வடைகளை PHI சாப்பிட்டுவிட்டார். அவரின் முன் இருந்து சாப்பிட்ட ஒருவர் பருப்பு வடையை ருசி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென பருப்பு வடையை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் கத்தி கூப்பாடு போட்டார். அந்த பருப்பு வடைக்குள் சிறிய முடி ஒ்னறு கிடந்தது. உடனே நம்ப PHI க்கு தலைக்கு மேல் கோபம் வந்தது. ”எங்கேடா கடை முதலாளி” என கத்தினார். வடை பரிமாறிய பெடியனும் முதலாளிதான் பருப்பு வடை சுட்டுக் கொண்டு இருக்கிறார் என கூறினான். உடனே வடை சுட்டுக் கொண்டிருக்கும் இடத்துக்கு நம்ம PHI பறந்தார். அங்கு  கையில்லாத அந்த முதலாளி வடை சுட்டுக் கொண்டிருந்த நிலையைப் பார்த்து PHIக்கு தலை சுற்றியது.

அந்த முதலாளி ஒரு கையால் வடையை உருட்டி மற்றைய கையில்லாத பகுதியின் கமக்கட்டுப் பகுதிக்குள் வடையை வைத்து அழுத்தி தப்பித் தப்பியே அந்த வடையை எண்ணைச் சட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தார். PHIக்கு கொலை வெறி வந்தது. அங்கு நின்று சந்நதம் ஆடத் தொடங்கினார். PHIயின் கொலை வெறியைக் கண்டு கடை முதலாளி PHIயின் காலில் விழுந்து கதறினார். PHI எந்தவித மன்னிப்பும் கொடுக்காது அவனை நீதிமன்றில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக் கொடுத்தார். கடைக்கும் சீல் வைத்து பூட்டி விட்டார்கள். தண்டப்பணம் கட்டிய பின் நீதிமன்றில் இருந்து வெளியே வந்த கடை முதலாளி PHIஐப் பார்த்து ”ஐயா நீங்கள் சாப்பிட்ட கடலை வடைக்குள்ளேயே முடி இருந்தது” எனக் கேட்டார். PHI யும் பெருமிதமா ”அப்புடி நான் சாப்பிட்ட வடைக்குள் முடியிருந்திருந்தால் உன்னை நான் சிறைக்குள் தள்ளும்படியான கேஸ்தான் போட்டிருப்பன். நான் சாப்பிட்டது உழுந்து வடை” என கூறினார்.

அந்தக் கையில்லாத கடை முதலாளி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு வெளியேறினார். அப்பாவி PHIக்கு அவன் ஏன் சிரித்தான் என்று விளங்கவில்லை. கையில்லாதாவன் உழுந்து வடைக்கு எப்புடி ஓட்டை போட்டான் என்று PHI யோசிச்சிருந்தால்  முதலாளியை கட்டாயம் சிறைக்குள் தள்ளியிருப்பார். எப்புடி ஓட்டை போட்டிருப்பார்? வாசிக்கும் உங்களுக்கு விளங்கியிருந்தால் கொமன்ஸ் பகுதியில் நாகரிகமாகப் பதிலளிக்கவும்…..

வம்பன்……

error

Enjoy this blog? Please spread the word :)