நன்றாக கல்வி கற்ற முஸ்லீம்களே கொழும்பில் தற்கொலை தாக்குதலை நடாத்தினர்!!(Photos)
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள்
நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என
பாதுகாப்பு இராஜாங் அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இந்தத் தகவலை அவர் வெளியிட்டார் .
”தற்கொலைத் தாக்குதல் நடத்திய 9 பேரும் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு
இருப்பவர்கள். அவர்களது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் உள்ளனர்.
தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்தார். பின்னர் அவர்
முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக
குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.