புதினங்களின் சங்கமம்

யாழில் இன்று தொடங்கி அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன!! அரச அதிபர் அறிவிப்பு!!

டெங்கு நோயினை கட்டுப்படுத்த யாழிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துக யாழ் மாவட்ட அரச அதிபர் உத்தரவு

யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவித்தலை ஒவ்வொரு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் விடுத்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் யாழ் மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசேடமாக ஒரு கருத்தை முன் வைத்திருந்தனர்.

அதாவது யாழ் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகளவு மாணவர்கள் சென்று கல்வி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

அங்கு குறித்த நோய்கள் பரவுவதற்கான சூழல் அதிகமாக காணப்படுவதால் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்றல் நடவடிக்கைகளை இரு வாரங்களுக்கு இடை நிறுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்த னர்.

சுகாதார துறையினரின் குறித்த வேண்டுகோளுக்கமைய அரச அதிபர், குறித்த அறிவித்தலை பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ளதுடன் அனைத்து தனியார் கல்வி நிறுவன இயக்குநர்களும் இந்த நட வடிக்கைக்கு ஒத்துழைக்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No photo description available.