இராணுவ ஜீப் மோதி கிளிநொச்சியில் இளைஞன் பலி!!
கிளிநொச்சி இராமநாதபுத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறீலங்கா வான்படையின் ஜீப் வண்டியும் உந்துருளியும் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜீப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.