புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு நெடுங்கேணி பிரதான வீதியோர மரங்களினால் ஆபத்தான நிலை!! (Photos)

முல்லைத்தீவு, நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பெரும் பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே வீழ்ந்து கிடக்கின்றது. கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை காரணமாக பெரும் பழமைவாய்ந்த மரங்கள் வீதியோரமாக வீழ்ந்து கிடக்கின்றது.

IMG20200926151314

அத்தோடு வீதி அருகேயுள்ள மரங்கள் பிரதான வீதி நோக்கி சரிந்துள்ளது.இதனால் இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள், பொதுமக்கள், பேருந்துகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு குறித்த வீதியிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG20200926151500
20171031 081350
IMG20200926151850