புதினங்களின் சங்கமம்

யாழ் ஆய்வு கூடப் பரிசோதனையின் படி 7 பேருக்கு கொரோனா!!

கடந்த 14 நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் வெளியிடுகின்ற கொரோனா தொடர்பிலான அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 14 நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் 15.09.2020 திகதி இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் 22.09.2020 ம் திகதி தனிமைப்படுத்தல் மையம் இரணைமடுவைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் , 25.09.2020 முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் , 26.09.2020 விடத்தல்பளை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த மூன்றுபேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 14 நாடகளாக 662 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இன்று பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் (27.09.2020) : 49 பேர்

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 2 பேர்

* வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -22 பேர்

* வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 25 பேர்