புதினங்களின் சங்கமம்

கனடா விமானத்தின் ரயர் வெடித்து தீப்பிடித்த காட்சிகள்!! சாதுாரியமாக இறக்கிய விமானி!! (Photos)

கனடாவுக்கு சென்ற விமானத்தின் ரயர் வெடித்துடன் இயந்திரம் தீ பற்றியது. சாதூரியமாக தரையிறக்கிய விமானி.

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் (Madrid) நகரின் பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கனடாவின் டொரோண்டோ நகரை நோக்கி பறந்த Boeing 767 விமானத்தின் ரயர் நடுவானில் வெடித்துடன், இயந்திரமும் எரிந்த நிலையில் விமானியின் சாதூரியத்தால் அவசரமாக மட்ரிட் விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 128 பயணிகள் பயணித்துடன் விமானம் ஓடுபாதையில் ஓடி மேலெழுந்து சில மணி ரேங்களில் ரயர் வெடித்துள்ளது. வெடித்த ரயரின் துண்டுகள் இயந்திரத்துக்குள் சென்றதால் இயந்திரம் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இயந்திரம் தீப்பற்ற தொடங்கியது. அதேவேளை விமானத்தில் அதிகளவு எரிபொருள் இருந்ததால் விமானத்தை உடனடியாக தரையிறக்கமுடியாத நிலையில் விமான நிலைய கட்டுப்பாட்டறைக்கு விடையத்தை தெரிவித்த விமானி அனுமதி கிடைத்ததுடன் விமனத்தின் பாரத்தை குறைக்க மட்ரிட் வானில் விமானி fuel dumping முறையில் எரிபொருளை வெளியே விசிறச் செய்தார்.

இதேகனத்தில் காட்டுப்பாட்டறையில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட விமானத்தின் லான்டிங் கியரை மதிப்பிட F18 fighter jet விமானத்தை ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சு அனுப்பியது. அது பறந்த வண்ணம் விமானத்தில் இருந்த அதிகாரிகள் மதிப்பீடு செய்து கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்தனர்.

இந்த வேளையில் விமானத்தின் எரிபொருள் கனிசமாக வெளியில் வெளியேற்றம் நடந்த பின் உடனடியாக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் (Madrid) நகரின் பராஜாஸ் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிகொடுத்ததுடன் ஓடுபாதைக்கு அருகே அவசர தீயணைப்பு வாகனங்கள் அவசரமாக கொண்டுவந்து நிறுத்தப்பட்டன.

இரு விமானிகளின் சாதூரியத்தால் வெற்றிகரமாக விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் ஒடியது. உடினடியாக அவசர கதவு மூலம் பயணிகள் வெளியேறினர். 128 பயணிகளும் உயிர்தப்பினர்.

Image may contain: outdoorImage may contain: possible text that says 'Source: Twitter'Image may contain: sky and aeroplaneImage may contain: aeroplane, sky, outdoor and natureImage may contain: 1 person, aeroplaneNo photo description available.Image may contain: text